2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

நாட்டார் கலை விழா

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்,எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச கலாசார அதிகார சபையினால் நாட்டார் கலை விழா வாழைச்சேனை இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

பிரதேச கலாசார அதிகார சபையின் உப தலைவர் ஆசிரியை திருமதி ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்; பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து, குழுப்பாடல், குழு நடனம், தனிப்பாடல், நாட்டார் பாடல் பேச்சு, கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலய மாணவிகளின் அருவி வெட்டு குழு நடனம் உட்பட்ட பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்தோடு அண்ணாவியார் செ.நல்லதம்பியின் சேவையைப் பாராட்டி பிரதேச கலாசார அதிகார சபையினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், நிகழ்ச்சிகளை வழங்கிய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

நாட்டார் கலைகள் மருவிச் செல்லும் வகையில் அதனை வளர்க்கும் முகமாக வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச கலாசார அதிகார சபை உருவாக்கப்பட்டு முதன் முதலாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X