Niroshini / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் திருமதி யோக யோகேந்திரன் எழுதிய மூன்று நூல்களின் அறிமுக நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் த.இன்பராசா தலைமையில் நடைபெற்றது.
தொலைத்துவிட்டோம் எத்தனையோ எனும் கவிதை நூலும் அவர்கள் அப்படித்தான் எனும் சிறுகதை நூலும் மீண்டும் ஒரு காதல் கதை எனும் நாவலும் இதன்போது அறிமுகம் செய்துவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில்,பிரதம அதிதியாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி சி.அமலநாதன்,சிறப்பு அதிதிகளாக காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன்,கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார்,உலக நண்பர்கள் அமைப்பின் தலைவர் ஏ.கங்காதரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது நூல் அறிமுகவுரையினை பிரபல எழுத்தாளர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணனும் ஏற்புரையினை நூலாசிரியர் திருமதி. யோக யோகேந்திரனும் நிகழ்த்தினர்.
நூலின் முதல் பிரதியினை ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி. நடராஜா பெற்றுக்கொண்டார்.
இதன்போது,நூலாசிரியர் கௌரவிக்கப்பட்டார்.


1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago