2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

நூல்கள் வெளியீடு

Niroshini   / 2016 மே 25 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

–தீசான் அஹமட்

மூதூர் எம்.ஏ.எம்.அனஸ் எழுதிய ஒன்பது நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மூதூர் ஜபீறா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கவிஞர் மூதூர் முகைதீன் தலைமையில் நடைபெறவுள்ள இவ்வெளியீட்டு விழாவில் அனஸ் எழுதிய இஸ்லாமிய குறல் ,வசந்தம் ,அஸ்ரப் அமர காவியம் ,கவஞர் எஸ்.எல்.எம்.முகைதீன் கவிதைகளில் தலைமைத்துவ தகைமைகள் ,எந்தன் ஊரே ,வாப்பு மரைக்கார் வழிக்காவியம் ஆகிய ஒன்பது நூல்கள் வெளியிடப்படவுள்ளன.

மேற்படி நூல்களுக்கான நயவுரைகளை கலாபூசணம் ஏ.எம்.எம்.அலி ,கலாபூசணம் கௌரிதாசன், கலாபூசணம் மூதூர் முகைதீன், கவிஞர் அமர்த்தீன், கலாபூசணம் எஸ்.விபுணசேகரம், கவிஞர் கே.எம்.சிராஜ், எம்.சீ.சபருள்ளா, ஏ.சீ.எம்.முஸ்இல், திருமலை நவம் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி கலந்து சிறப்பிக்கவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .