Niroshini / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு - எருவில் கண்ணகியம்மன் ஆலயத்தின் “திருச்சடங்கு முறைகள்” எனும் நூல் மற்றும் இறுவெட்டு வெளியீட்டு விழா நேற்று திங்கட்கிழமை எருவில் சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் அதிபர் சி.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது.
ஆலயத்தின் சடங்குமுறை, கண்ணகியம்மன் வரலாறு, அற்புதங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய வகையில் இந்நூலும் இறுவெட்டும் அமையப்பெற்றுள்ளன.
எஸ். ரகுபதி என்பவரால் ஆக்கப்பட்ட இவ் வெளியீடுகளுக்கான ஆசியுரையை அகோர சிவாச்சாரியார் இரா.கு.கோபாலசிங்கம் குருக்கள் வழங்கியிருந்தார். அறிமுக உரையை ஓய்வு நிலை நிருவாக உத்தியோகத்தர் ஐ.சுப்பிரமணியமும் வெளியீட்டுரையை ஆசிரியர் கி.குமாரசிங்கமும் நயவுரையை தமிழ் வளவாளர் க.பேரின்பராசா ஆசிரியரும் நிகழ்த்தினர்.
இறுவெட்டுக்கான பாடல் அறிமுகத்தை கலாபூசணம் கலைச்சுடர் கோவிலூர் தணிகாசலம் குழுவினர் நிகழ்த்தினர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .