2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

நூல் வெளியீடு

Niroshini   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

வைத்தியகலாநிதி சம்பூர் அ. சதீஸ்குமார் எழுதிய 'சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலய வரலாறும் மகிமையும்' எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலில் கவிஞர் க.யோகானந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, நூலின் முதல் பிரதியை சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தின் பிரதம குரு கலாபூசனம் சிவஸ்ரீ அ.அரசரெத்தினம் நிகழ்வின் முதன்மை அதிதியான கலாநிதி ஆறுதிருமுருகனிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

யோகானந்தன் தலைமையுரையும் நூலின் அறிமுக உரையை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர் சரா. புவனேஸ்வரனும் நயவுரையை சேனையூர் மத்திய கல்லூரி அதிபர் இரா. இரத்தினசிங்கமும் நிகழ்த்தினர்.

சம்பூர் மீள் குடியேற்றம்  இடம்பெற்றுவரும் நிலையில் சம்பூரில் 10 வருடங்களின் பின் வெளியிடப்பட்ட முதல் நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .