2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

பறைமேள கூத்து ஆற்றுகை

Kogilavani   / 2016 மே 13 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, யுஜாஹித்

மட்டக்களப்பில் புகழ்பெற்ற பறை மேள கலைஞர்கள் மற்றும் கிழக்குப் பல்கலைகழக மாணவர்கள் இணைந்து வழங்கிய பறைமேள கூத்து ஆற்றுகையும் காட்சிப்படுத்தலும் செவ்வாய்க்கிழமை(10) மாலை சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் வளாகத்தில் நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாக கருதப்படும் பறைமேளக் கூத்துக் கலையை புதுமையான பாணியில் இளந்தலைமுறையினருக்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நோர்வே தூதரகம் மற்றும் மொபிடல், சேவாலங்கா நிறுவனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் பேராசிரியர் சி.மௌனகுரு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்வேறு விதமான பறைமேள இசைகள் இசைக்கப்பட்டு பறை மேள கூத்துகளும் ஆடப்பட்டதுடன் தமிழர்களின் பாரம்பரிய கலையான இப்பறை மேள கூத்துக் கலையை சிறந்த முறையில் முன்கொண்டுச்செல்லும் கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர். பாரம்பரிய கூத்துக்கலையின் வடிவங்கள் தாங்கிய மாணவர்களின் ஓவியக் கண்காட்சியும் இதன்போது இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X