2025 நவம்பர் 05, புதன்கிழமை

முத்தமிழ் விழாவும் தேனகம் சஞ்சிகை வெளியீடும்

Gavitha   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முத்தமிழ் விழாவும் தேனகம் சஞ்சிகை வெளியீடும் நேற்று செவ்வாய்க்கிழமை (05) காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக பேராசிரியர் சி.மௌனகுரு கலந்துகொண்டதுடன் கலைஞர்கள், இலக்கியவாதிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அதிபர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது, மண்முனை வடக்கு பிரதேசத்தில் இருந்து பல ஆண்டுகளாக கலைச்சேவை மற்றும் வைத்திய சேவையை மேற்கொண்டு வரும் கலைஞர்கள்,ஆயுர்வேத வைத்தியர் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் முத்தமிழ் விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் தேனகம் சஞ்சிகையின் வெளியீட்டு உதவிய கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்ற பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X