2024 ஜூன் 17, திங்கட்கிழமை

மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை!

Editorial   / 2024 மே 10 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவை சேர்ந்த வாலிபர் ஒருவர், மரங்களை கட்டிப்பிடித்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

வனவியல் ஆர்வலரான அபுபக்கர் தாஹிரு எனும் 29 வயது இளைஞரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

இவர், சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 19 மரங்கள் அளவிலாக, ஒரு மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்துள்ளார்.

இந்த சாதனையானது டஸ்கெகி தேசிய வனப்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

சாதனை பற்றி அபுபக்கர் கூறுகையில், இந்த உலக சாதனையை அடைவது நம்ப முடியாத அளவுக்கு வெகுமதி அளிக்கிறது. இது நமது சுற்றுச்சூழல் அமைப்பின் மரங்களின் முக்கிய பங்கை எடுத்து காட்டுவதற்கான ஒரு அர்த்தமுள்ள செயலாகும் என்றார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாதனை தொடர்பான காணொளியை உலக கின்னஸ் சாதனை நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X