Sudharshini / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்ணகுமார் சொரூபன்
யாழ். இந்து ஆரம்ப பாடசாலையின் நூற்றாண்டு நிறைவு விழாவின் முதல் நாள் நிகழ்வுகள், இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (26) இடம்பெற்றது.
1915ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை தற்போது நூற்றாண்டை கடந்து நிற்கின்றது. இவ்விழா மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளன.
இன்று இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்களது கலை நிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் நா.மகேந்திரராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன், சிறப்பு விருந்தினராக யாழ். வலயக்கல்விப் பணிப்பாளர் ந.தெய்வேந்திராசா, தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆர். திருமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago