Niroshini / 2015 நவம்பர் 11 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தமிழ் இலக்கிய விழா 2015இல் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன் (முஹம்மட் இஸ்மாயில்) கலை இலக்கிய ஊடகத்துறைக்கான வித்தகர் விருதினை பெற்றுள்ளார்.
இவருக்கான விருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை விவேகானந்தா கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை(08) மாலை மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டத்துறை அமைச்சர் சீ.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் செய்னுலாப்தீன் நசீர் அஹமட், கௌரவ அதிதிகளாக விவசாய அமைச்சர் கீ.துரைராசசிங்கம், மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன்.கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.டி.எம்.எஸ்.அசங்க அபேவர்தன, பண்பட்டலுவல்கள் திணைக்கள மாகாண பணிப்பாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மீரா எஸ்.இஸ்ஸடீன் கலை இலக்கிய ஊடகத்துறை வரலாற்றில் 40வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர். கடந்த காலங்களில் செய்திச் சிமிழ், இரத்தின தீபம், வாழும் போதே வாழ்த்துவோம், உயர்ந்த மண்ணின் உன்னத விருது உட்பட மாவட்ட ரீதியில் பல விருதுகளை பெற்றுள்ளார். அத்துடன் 2009ஆம் ஆண்டு தேசிய ரீதியில் கலாசார அமைச்சினால் ஊடகத்துறைக்கான கலாபூஷணம் விருதையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்,ஊடகத்துறையில் உள்நாட்டில் அரச தனியார் அச்சு இலத்திரனியல் நிறுவனங்களில் பணியாற்றுவதுடன் வெளிநாட்டு செய்திச் சேவை நிறுவனங்களான ராய்ட்டர் செய்திச் சேவை, லண்டன் தீபம் என்பவற்றுக்கும் செய்திகளை வழங்குபவராகவும் இருந்து வருகின்றார்.


1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago