2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வெள்ளி விழா கண்ட அவுஸ்திரேலிய சிட்னி தமிழ் அறிவகம் (நூலகம்)

Kogilavani   / 2016 மே 11 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, சிட்னி தமிழ் அறிவகத்தின் வருடாந்த கலாசார நிகழ்வான 'வசந்த மாலை - 2016' வெள்ளி விழா நிகழ்வாக கடந்த ஞாயிற்றுக்ழமை Ryde இல் உள்ள Civic Centre   மண்டபத்தில்  நடைபெற்றது.

அவுஸ்திரேலியாவில் பெருமளவிலான தமிழர்கள் வாழ்ந்து வரும் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள சிட்னி அறிவகமானது, தமிழர்களின் வாசிப்புத் தேடலை பூர்த்தி செய்யும் பணியை முன்னெடுத்து வருகின்றது.

ஹோம்புஷ் தமிழ்ப் பாடசாலை மாணவர்களின் தமிழ்மொழி வாழ்த்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில்,  பல் கலாசாரத்துக்கான பிரதியமைச்சரும் நியூசவுத்வேல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். சிட்னி தமிழ் அறிவகத்தில் நீண்டகாலமாக தொண்டாற்றி வந்த சில மூத்த உறுப்பினர்கள் இந்நிகழ்வில்  கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது, இசை நிகழ்வு, பரதாலயா நடன நிகழ்வு என்பன நடைபெற்றன. சிட்னி தமிழ் அறிவகமானது 1991 ஆம் ஆண்டு,  20 நூல்களோடு தொடங்கப்பட்டது. இந்நூலகமானது தற்போது 8,500க்கும் அதிகமான நூல்களை தன்னகத்தே கொண்டு சிட்னி மாநகரில் அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு அருகில் இயங்கி வருகின்றது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .