2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

முதுபெரும் அண்ணாவியார் க.நோஞ்சிப்போடி காலமானார்

A.P.Mathan   / 2013 மே 18 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்
 
மட்டக்களப்பு கன்னன்குடாவைச் சேர்ந்த நூறு வயதைத் தாண்டிய முதுபெரும் அண்ணாவியார் கணபதிப்பிள்ளை நோஞ்சிப்போடி அவர்கள் இன்று சனிக்கிழமை காலமானார்.
 
அன்னாரின் பூதவுடல் தற்போது வவுணதீவு பிரதேசத்திலுள்ள இலுப்பையடிச்சேனை குருந்தையடி கிராமத்திலுள்ள அன்னாரது இருப்பிடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 
 
அண்ணாவியார் க.நோஞ்சிப்போடி அவர்கள் 1913.02.01ஆம் திகதி கன்னன் குடாவில் பிறந்துள்ளார். கூத்துப் பாரம்பரியம் மிக்க கிராமத்தில் வாழ்ந்த இவர் தனத 17ஆவது வயதில் அண்ணாவியாராகத் தகுதி பெற்றுள்ளார். தற்போது மட்டக்களப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணாவிமார்களுள் நூறு வயதைக் கடந்த, வயதில் மூத்தவராகவும் வாழ்ந்தவர்.
 
மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்தின் வடமோடி, தென்மோடி கூத்துப் பாரம்பரியங்கள் செழுமையாக வளர்ந்து இன்றுவரை இக்கூத்துப் பாரம்பரியம் மிகவும் வீரியத்துடன் திகழ்வதற்கு பங்களிப்பு வழங்கிய தலைக் கூத்தராக இவர் விளங்கியுள்ளார்.
 
இவ்வாறு மட்டக்களப்பு பாரம்பரிய கூத்துக்களிலும், பாரம்பரிய உள்ளுர் அறிவு முறைகளிலும் மிகவும் புலமை பெற்றுத் திகழ்ந்த முதுபெரும் அண்ணாவியார் க.நோஞ்சிப்போடியாரின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள ஈடு செய்யமுடியாத பேரிழப்புக்களுள் ஒன்றாக உள்ளது.

You May Also Like

  Comments - 0

  • gowrieeswaran.T Saturday, 18 May 2013 06:00 PM

    ஒரு மா மேதையை நாம் இழந்து விட்டோம்

    Reply : 0       0

    Karnan Saturday, 21 September 2013 06:44 PM

    முதுபெரும் அண்ணாவியார் க.நோஞ்சிப்போடியாரின் இழப்பு தமிழ் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள ஈடு செய்யமுடியாத பேரிழப்பு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .