Freelancer / 2025 டிசெம்பர் 03 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டு நன்கொடையாளர்களால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை தீர்வை வரிகள் மற்றும் ஏனைய வரிகள் இன்றி விடுவிப்பதற்கு சுங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நிதியமைச்சின் அனுமதிக்கு உட்பட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனிடையே, வெளிவிவகார அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக நிவாரணங்களாக தேவைப்படும் பொருட்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதன் பின்னர் விமானம் அல்லது கடல் மார்க்கமாக நாட்டிற்கு அனுப்பும் பொருட்களை வரியின்றி விடுவித்துக்கொள்ள முடியும்.
இதற்காக இறக்குமதியாளரினால் குறித்த பொருட்கள், செயலாளர், பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ நிலையம், வித்யா மாவத்தை, கொழும்பு 07 என முகவரியிடப்பட்டு அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)
8 minute ago
13 minute ago
22 minute ago
02 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
13 minute ago
22 minute ago
02 Dec 2025