Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 27 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.குகன்
பிரபல நாதஸ்வர மேதை முருகப்பா பஞ்சாபிகேசன் தனது 91 ஆவது வயதில் வெள்ளிக்கிழமை (26) காலமானார்.
கொழும்பில் வசித்து வந்த அவர், சுகயீனம் காரணமாக கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அங்கு காலமானார்.
சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது 15 ஆவது வயது முதல் கச்சேரியை அரங்கேற்றினார். இவர் கலைக்கு ஆற்றிய சேவையைக் கருத்திற்கொண்டு 2010 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.
லயஞான குபேர பூபதி, இசை வள்ளல், நாதஸ்வர கலாமணி, நாதஸ்வர இசை மேதை, நாதஸ்வர சிரோண்மணி, நாதஸ்வர கான வாரிதி, சுவர்ண ஞான திலகம், சிவகலாபூஷணம், கலாபூஷணம் போன்ற பட்டங்களையும் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இவரது இறுதிக்கிரியை எதிர்வரும் திங்கட்கிழமை (29) சாவகச்சேரியில் நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago