Princiya Dixci / 2015 ஜனவரி 30 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

பல்லவி
உண்மைக்கு உடை வேண்டுமா – ஞான
உண்மைக்கு உடை வேண்டுமா – உள்ள
உறுதிக்குத் துணை வேண்டுமா
அனுபல்லவி
சொல்லாலும் செயலாலும் கருத்தாலும் ஒன்றான (உண்மைக்கு)
சரணம்
1. பொய்கூறிப்புறம் பேசும் போலிகள் - அறிவுக்குப்
புத்தகம் வழி காட்டுமா - வேதப்
புத்தகம் வழி காட்டுமா - ஞான
தத்துவம் தலைகாட்டுமா (உண்மைக்கு)
2. மாடிப்படி வீட்டில் வாசம் செய்தாலுமென்
மோட்சப்படி கிட்டுமா – உயர்
மோட்சப்படி கிட்டுமா – தெய்வக்
காட்;சி நிலை கிட்டுமா (உண்மைக்கு)
3. ஆதியைத் தேடி நீ அருள் பெற நாடினால்
ஜோடியை நீக்கு நீ தோழா - இணை
ஜோடியை நீக்கு நீ தோழா – உள்ள
ஜோதியில் மூழ்கு நீ நேசா (உண்மைக்கு)
-ஷெய்ஹூல் முப்லிஹீன் எம். எஸ் எம் அப்துல்லாஹ் (றஹ்)
23 minute ago
33 minute ago
34 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
34 minute ago
37 minute ago