Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Administrator / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல்லவி
இறைவனுக்கிணை கற்பிக்கும் மனிதன்
எங்கே அறிவை விட்டுவிட்டான்
எங்கே அறிவை விட்டுவிட்டான்
ஏனோதானோ வாழுகிறான் - அவன்
எரிநரகிலே வீழுகிறான்
எரிநரகிலே வீழுகிறான்
சரணம்
1. இணையின் விளைவே அறிவில் இருளை
இணைத்து நர்த்தனமாடுது
ஆசை காட்டி மோசம் செய்து
அணையா நெருப்பில் தள்ளுது
வேதமோதிய வேதியரில் பலர்
வேசத்திலே வாழ்கின்றார்
ஏழைமக்கள் இன்னோரை நம்பி
இருளில் மூழ்கித்தவிக்கிறார்
இருளில் மூழ்கித்தவிக்கிறார் (இறைவனுக்கிணை)
2. மருட்டும் மயக்க வாழ்வுக்காக
மனதைக்கல்லாய் மாற்றினான்
மக்கள் மத்தியில் மதிப்பைத் தேடி
மறையை மறுத்து வாழ்கிறான்
மனதில் தோன்றும் மருட்சி அலைகள்
மனிதப்பண்பை மாற்றுது
மதியிருந்தும் தெளிவில்லாத
மடையர் வாழ்வு மண்ணேதான்
மடையர் வாழ்வு மண்ணேதான் (இறைவனுக்கிணை)
3. இணையில் மூழ்கி இரும்பாய் மாறிய
இதயம் சாந்தி அடையுமா
கருணைக்கண்ணே இல்லாக்கயவர்
காட்டும் வழிகள் பொருந்துமா
கறையில்லாத மறையை மீற
மனித அறிவு துணியுமா
இயற்கையறிவோடிணையை நீக்கு
ஈருலகிலும் சாந்திதான்
ஈருலகிலும் சாந்திதான் (இறைவனுக்கிணை)
4. மனிதயுகம் போடும் சட்டம்
மாற்றியமைக்க நேரிடும்
மாற்றியமைத்த பின்பும் உள்ளம்
மருட்சியின்றி வாழாது
இறைவன்தந்த இனியவேதம்
இருளை நீக்கி ஒளி தரும்
என்றும் சாந்தி பெற்று வாழ
இயற்கைவழியில் செலுத்திடும்
இயற்கைவழியில் செலுத்திடும் (இறைவனுக்கிணை)
(ஷெய்ஹூல் முப்லிஹீன் எம்.எஸ்எம். அப்துல்லாஹ் (றஹ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago