2025 ஜூலை 05, சனிக்கிழமை

120 லட்சம் ரூபாய் செலவில் தடுப்புச்சுவர்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

நிந்தவூர் பிரதேசத்தில் கடற்கரை சார்ந்தப்  பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக,  கரையோரம் பேணல் திணைக்களத்தினால் 12 மில்லியன் ரூபாய் செலவில் 100 மீற்றர் நீளத்துக்குக்  கற்களைக் கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைத்திட்டம்,  நேற்று முன்தினம் (16) நிந்தவூர் பிரதேச செயலாளர் ரீ. எம். எம் அன்ஷார் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மீன்பிடி நடவடிக்கைகள் நடைபெறாத பகுதிகளில் ஆரம்பக்கட்டமாக  இவ்  வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்படுகின்ற  பகுதிகளில் கற்களைக் கொண்டு தடுப்பு சுவர் அமைப்பது, அவர்களின் நாளாந்த தொழிலுக்கு தடையாக அமையும் என்பதனால் இப்பகுதியில் ஜியோ பையில் (Geo bag)  மண் மூடைகள் இடுவதற்காகத்  திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில்  ஜியோ பைகளில் மண் இட்டு நிரப்பி  கடல் அரிப்பை தடுக்கும் முறைகள் எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து 25 மில்லியன் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .