2025 மே 13, செவ்வாய்க்கிழமை

133 ஆவது ஜனன தினம்

R.Tharaniya   / 2025 மே 04 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 133 வது ஜனன தின நிகழ்வு சனிக்கிழமை(3) மட்டக்களப்பு  கல்லடி-உப்போடை விபுலானந்தர் மணி மண்டப  வளாகத்தில் உள்ள    அடிகளாரின் சமாதியில் இடம் பெற்றது .

இராமகிருஷ்ண மிஷன் துறவியும் ,முத்தமிழ்  வித்தகர்,சிவானந்தா வித்தியாலய ஸ்தாபகருமான சுவாமி விபுலானந்தரின் 133வது பிறந்த தினத்தை முன்னிட்டு கல்லடி-உப்போடை விபுலானந்த மணி மண்டபத்திலுள்ள அடிகளாரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இராமகிருஷ்ண மிஷன் பொது மேலாளர் சுவாமி நீலமாதவானந்தாஜி மகராஜ் தலைமையில் இடம் பெற்றது .

இந்நிகழ்வில் விபுலானந்த பக்தர்கள் ,கல்விமான்கள் ,மாணவர்கள் ,சமூக ஆர்வலர்கள் ,விபுலானந்தர் சபையினர் கலந்து கொண்டு அன்னாரை நினைவுகூர்ந்து அவர் பாடிய பாடல்களை பாடியும்  அன்னாரின் சமாதிக்கு மலர்மாலை அணிவித்து,அவரை வணங்கி வழிபட்டார்கள்.

க.விஜயரெத்தினம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X