2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

20 Kg மான் இறைச்சியை கடத்திய இருவர் கைது

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 10 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரடியனாறு பிரதேசத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்துக்கு பட்டா ரக சிறிய வாகனத்தில் 20 கிலோ மான் இறைச்சி கடத்தி சென்ற இருவரை வியாழக்கிழமை (10) பகல் செங்கலடி கறுத்த பாலத்தில் வைத்து கைது செய்துள்ளதாக ஏறாவூரில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பாலத்தில் சம்பவ தினமான வியாழக்கிழமை (10)   பகல் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் இதன்போது கரடியனாறு பிரதேசத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்தை நோக்கி பிரயாணித்த சிறிய ரக வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் மறைத்து கடத்தி கொண்டு செல்லப்பட்ட 20 கிலோ மான் இறைச்சியை மீட்டதுடன் இருவரை கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை கைப்பற்றினர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் செங்கலடி பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த 32வயதுடையவர் மற்றும் பங்குடாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

கனகராசா சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .