2025 மே 13, செவ்வாய்க்கிழமை

5, 6 திகதிகளில் வாகன வரிப் பத்திர சேவை மூடப்படும்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 30 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகிற வாகன வருமான வரிப் பத்திரம் வழங்கும் கருமபீட சேவை செயற்பாடுகள் இம்மாதம் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெறமாட்டாது என்று கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள மாகாண ஆணையாளர் திருமதி த.வருணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலையொட்டி குறித்த இரு தினங்களில்,கிழக்கு மாகாண தலைமைக் கருமபீடம் உட்பட மாகாணத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் இயங்கி வருகின்ற கரும பீடங்கள் யாவும் மூடப்படவிருப்பதனால், வாகன வருமான வரிப் பத்திரம் வழங்கும் சேவைகள்  இடம்பெறமாட்டாது என்றும், அதன் பின்னர் 7 ஆம் திகதி இச்சேவை வழமை போன்று இடம்பெறும்.

என கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள மாகாண ஆணையாளர் திருமதி த.வருணி பொதுமக்களுக்கு அறிவித்தல் வழங்கியுள்ளார்.

அபு அலா 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X