Janu / 2023 ஜூன் 22 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
கல்முனை ஆதரவைத்தியசாலையில் 60 குருதிக்கொடையாளர்களை கௌரவித்த நிகழ்வு புதன்கிழமை ( 21) இடம் பெற்றது.
இந் நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. இரா. முரளீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வின் போது வைத்தியசாலைக்கு நன்கொடைகள் வழங்கிய 60 கொடையாளர்கள் பாராட்டு நற்சான்றுகளும் நினைவு சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜெ மதன் வைத்திய நிபுணர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை குழுவினரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வின் போது அம்பாறை மாவட்டம், கல்முனை, துரைவந்திமேடு எனும் கிராமத்தைச் சேர்ந்த ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ எனும் நான்கு வயதுச்சிறுமி அவர்களும் கௌரவிக்கப்பட்டார். இவர் மாபெரும் இரண்டு உலக சாதனைகள் படைத்துள்ளார்.
இவர் தனது இரண்டு கைகளாலும் A-Z வரை குறுகிய நேரத்தில் எழுதி அவர் படைத்த அவரின் சாதனையை அவரே முறியடித்து 2 உலக சாதனைகளை படைத்துள்ளார்.



9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago