2025 மே 09, வெள்ளிக்கிழமை

65 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு நடைபவனி

Janu   / 2023 செப்டெம்பர் 28 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா  மத்திய கல்லூரியின்  65 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு, வியாழக்கிழமை (28)  பழைய மாணவர்களின்  நடைபவனி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்லூரி மைதானத்திலிருந்து ஆரம்பித்த இந்த நடைபவனி, பிரதான வீதியாக சென்று, மட்டக்களப்பு - திருகோணமலை வீதியை அடைந்து, அங்கிருந்து மாஞ்சோலைச்சேனை வீதி வழியாக வலம் வந்து,  கல்லூரி வாயிலை அடைந்தது.

கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால், ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடைபவனியில், 65 அடி நீளமான கல்லூரி கொடி இணைத்துக் கொள்ளப்பட்டதோடு, இந்தக் கல்லூரி உருவாக்கிய பல்வேறு தரத்திலும் உள்ள பழைய மாணவர்கள் ஆயிரக்கணக்கில் கலந்தும்  கொண்டனர்.

அத்தோடு, இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு, பல்வேறு கலை, கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

 ஒலுமுதீன்  கியாஸ் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X