Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 பெப்ரவரி 28 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்மாந்துறை பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் பாதசாரிகளுக்கு பல்வேறு வழிகளிலும் இடையூறை ஏற்படுத்தி வருகின்ற பாதையோர அங்காடி வியாபாரிகளை அகற்றும் பணி சம்மாந்துறை பிரதேச சபை புதன்கிழமை (28) முதல் மேற்கொண்டு வருகின்றன.
சம்மாந்துறை பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைவாக சம்மாந்துறை நகரத்திலிருந்து அம்பாறை வீதி, மல்கம்பிட்டி வீதி பொலீஸ் வீதி மற்றும் கல்முனை வீதிகளின் இரு மருங்குகளிலும் தற்காலிக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்களினால் பாதசாரிகள் மட்டுமல்லாது போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பல்வேறு வகையான வாகனங்களுக்கும் பெரும் அசெளகரியங்களை ஏற்படுத்தி வருவதுடன் வீதி விபத்துகளும் அதிகரித்து காணப்படுகின்றன.
இவ்வாறான ஆபத்துக்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடன் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே முஹம்மட் தலைமையில் கல்முனை வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸார் , பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், வர்த்தக சங்கம் உள்ளிட்ட ஒன்றிணைந்த குழுவினரால் இனங்காணப்பட்ட தற்காலிக அங்காடி வியாபாரிகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்
40 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
2 hours ago