J.A. George / 2023 ஜூன் 16 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் பாடசாலையின் பழைய மாணவர்களின் நிதியுதவியில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடசாலை தளவாடம் பழைய மாணவர் சங்கத்தினால் பாடசாலைச் சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.
பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர். றஜாப், பாடசாலை அதிபர் ஏல்.எல். அப்துல் ஜெலீல் தலைமையிலான பாடசாலை நிர்வாகத்திடம் இத்தளவாடங்களை புதன்கிழமை (14) கையளித்தார்.
தரம் 10 மற்றும் 11 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ள இப்பாடசாலையில் நிலவும் ஆளணி மற்றும் பௌதீக வளப் பற்றாக்குறை தொடர்பில் பழைய மாணவர் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அதனடிப்படையில், தற்போது இங்குள்ள ஆசிரியர்களுக்கு மேலதிகமாக அவசியமான சில பாடங்களை கற்பிப்பதற்காக வெளியில் உள்ள தகுதிவாய்ந்த வளவாளர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, பாடசாலையில் நீண்டகாலமாக நிலவி வரும் தளவாடப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்பை பெற்றுக் கொண்டு 80 மாணவர் மேசைகள், கதிரைகள், ஆசிரியர் மேசைகள், மற்றும் வெண்பலகைகள் ஆகியவை தற்போது அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் இரு வகுப்பறைகள் புதுப்பொலிவூட்டப்பட்டுள்ளன.
நிகழ்வில் உரையாற்றிய பாடசாலை அதிபர் ஏ.எல்.ஏ. ஜெலீல், தரம் 10, 11 இற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்கும், வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் பழைய மாணவர் சங்கத்திற்கும் அபிவிருத்தி சங்கத்திற்கும் பழைய மாணவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர். றஜாப் மற்றும் உறுப்பினர் வைத்தியர் எம்.எம். தமீம் ஆகியோர் மாணவர்களுக்காக உரையாற்றினர். இந்நிகழ்வில் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
ஏ.எல்.நிப்றாஸ்
8 hours ago
8 hours ago
9 hours ago
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago
26 Apr 2026