2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

அங்காடி வர்த்தக நிலையத்தில் தீ பரவல்

Janu   / 2025 ஜூன் 01 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி நகரில் பல சரக்கு அங்காடி வர்த்தக நிலையத்தில் சனிக்கிழமை (31)  அன்று தீ பரவல் ஏற்பட்டுள்ளது.  

இந்த தீ பரவல் காரணமாக வர்த்தக நிலையம் முற்றாக எரிந்துள்ளதுடன் இதனால் இரண்டு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும் படையினர் காத்தான்குடி நகரசபை தீயணைப்பு படையினர் குறித்த இடத்திற்கு வந்து பொது மக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயை அணைக்க களத்தில் நின்று பாடுபட்ட நான்கு இளைஞர்கள் மூச்சுத்திணறல் காரணமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அதில் இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர்.

மேலும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

எம். எஸ். எம். நூர்தீன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .