Janu / 2025 மே 20 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள அதிபரொருவரின் வீட்டுக்கு நள்ளிரவில் தீ வைப்பதற்கு முயற்சிக்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
அன்வர் நௌசாத் என்ற அதிபரின் வீட்டு வளவுக்குள் புகுந்தவர்கள் வீட்டின் முன் பகுதியில் தீ வைப்பதற்காக பல இடங்களில் பெட்ரோல் ஊற்றியுள்ளனர். சத்தம் கேட்பதை உணர்ந்து தான் வெளியில் வந்து பார்த்ததாகவும் இதன்போது பெட்ரோல் ஊற்றியவர்கள் தப்பித்து ஓடியதாகவும் குறித்த அதிபர் கூறினார்.
மேலும், தப்பித்து ஓடியவர்கள் கற்களை வீசி தாக்கியதாகவும் அதனை அடுத்து பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்கள் பற்றி முறையிட்ட பின்னர் பொலிஸார் தனது வீட்டுக்கு வந்து களத் தகவல்களை பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக சில அரசியல்வாதிகள் தன்னை பற்றி தொடர்ச்சியாக பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும், நடந்த சம்பவத்திற்கும் அதற்கும் தொடர்புகள் இருக்கலாம் எனவும் அன்வர் நௌசாத் மேலும் தெரிவித்தார்.
றிபாஸ்
24 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
54 minute ago
1 hours ago
2 hours ago