2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அம்பாறை மாவட்டத்திற்கு 418.33 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Ilango Bharathy   / 2021 ஜூன் 04 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

5000 ரூபா கொடுப்பனவிற்காக அம்பாறை மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 418.33 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் கொவிட் 19 பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்த குடும்பங்களின் வாழ்வதாரத்தின் பொருட்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பில் அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் பணிப்புரையில் ஆராயும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி வங்கிகளுக்கு அவர் இன்று விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆலையடிவேம்பு தெற்கு மற்றும் வடக்கு வங்கிகளுக்கும் சென்றிருந்தார். இதன்போதே அவர் அம்பாறை மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 83666 குடும்பங்களுக்காக 418.33 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .