Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 16 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும்
கடலரிப்பின் காரணமாகப் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து
வருவதோடு, அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரும் இடர்களை
எதிர்கொண்டு வருவதாக் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக அம்மாவட்டத்தில் ஒலுவில் தொடங்கி நிந்தவூர் ,காரைதீவு வரையிலான
பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பின் காரணமாக, 400 மீற்றர் வரையிலான
நிலப்பகுதிக்குள் கடல் புகுந்துள்ளதாகவும், இதனால் மீன்பிடி வாடிகள்,
பாதிப்புற்றுள்ளதோடு, கரையோரத்திலுள்ள தென்னை மரங்களும் அழித்து விடும் அபாய நிலைமை ஏற்பட்டு வருகின்றது.
இவ்வாறு கடலரிப்பு தீவிரமடைவதற்கு ‘ ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம்
நிர்மாணிக்கப்பட்டுள்ளமையே பிரதான காரணம்‘ என அப்பகுதி மக்கள் நீண்ட
காலமாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
கடலரிப்பைத் தடுக்க தற்காலிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் உரிய
பலன் கிடைக்க வில்லை. எனவே இவ்விடயத்தில் சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள்
நிரந்தரத் தீர்வுக்கான வேலைத்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்த வேண்டும் என
மீனவ சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
26 minute ago
26 minute ago
29 minute ago