R.Tharaniya / 2025 மே 26 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூரில் கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உப்பினை பொது சுகாதார பரிசோதகர்கள் பகுப்பாய்வுக்கு அனுப்பியதில் அதிகளவான அயடீன் கலந்துள்ளதை கண்டுபிடித்ததையடுத்து கடை உரிமையாளரை 10 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்துமாறு திங்கட்கிழமை (26) அன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வைற் சோல்ட் இலச்சனை இடப்பட்ட பொதி செய்யப்பட்ட உப்பை நாடு முழுவதும் தடை செய்ததுடன் அதனை கைப்பற்றி அழிக்குமாறும் தயாரிக்கும் இடத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் ஒரு கிலோ உப்பில் 30 கிராம் அயடீன் இருக்க வேண்டும் ஆனால் குறித்த உப்பில் 84 கிராம் அயடீன் கலந்துள்ளதாகவும் இது மனித பாவனைக்கு உகந்தது அல்ல என பகுப்பாய்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததை அடுத்து இன்று திங்கட்கிழமை (26) நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போது குறித்த உப்பு பையில் பொறிக்கப்பட்ட உற்பத்தி செய்யும் இடம் மற்றும் ஏனைய தரவுகள் போலியானது என்றும் ஏறாவூரில் சட்ட விரோதமாக பொதி செய்யப்பட்டு பல பெயர்கள் கொண்ட இலச்சினையுடன் விற்பனை செய்யப்படுவதாக நீதிமன்றிற்கு பொது சுகாதார பரிசோதகர் சுட்டிக்காட்டினர்.
கனகராசா சரவணன்
9 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
15 Dec 2025