Freelancer / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாம்பு தீண்டியதால் 12 வயது பாடசாலை மாணவன் செவ்வாய்க்கிழமை (03) பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளார்.

தோட்டவாடியில் திங்கட்கிழமை (02)உறங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே பாம்பு தீண்டியுள்ளது, என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, மாணவனின் வலது காலின் மேல் பாகத்தில் பாம்பு தீண்டியதால் குருதியோட்டத்தில் நஞ்சு கலந்து இதயம் செயலிழந்து உயிரிழந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ரீ.எல்.ஜவ்பர்கான் ,எச்.எம்.எம்.பர்ஸான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .