R.Tharaniya / 2025 ஜூன் 19 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் கட்டைபறிச்சான் விபுலானந்த வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர், பெளதீக வள பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி பாடசாலை மாணவர்களின் பெற்றோர் வியாழக்கிழமை (19) அன்று காலை பாடசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய பாடங்களைக் கற்பிப்பதற்கான கணித, வர்த்தகம், சிங்களம்,சமயம், I.C.T, ஆசிரியர் இன்மை, பௌதீக வளங்கள் இன்மை, போன்ற பிரச்சினைகளை சீர் செய்து தருமாறு கல்வி நிருவாகத்தின ரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த ஒரு தீர்வும் கிட்டவில்லை.
ஆதலால் குறிப்பிட்ட பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு கோரியே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.





ஏ.எச் ஹஸ்பர்
6 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
9 hours ago