R.Tharaniya / 2025 மே 25 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தளாய் பகுதியில் ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறி வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் வௌ்ளிக்கிழமை (23) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் பொலிஸார் வழங்கிய தகவலின் படி, குறித்த நபர் கந்தளாய் நகரில் இயங்கி வந்த ஆயுர்வேத மருந்தகத்தின் மூலமாகவே இந்த செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி திஸ்ஸ விதானகேவின் வழிகாட்டலின் கீழ், காவல் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் எச்.எம்.எம். செனவிரத்ன தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை (23) அன்று காலை இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
சோதனையின் போது, எட்டு பெட்டிகளில் இருந்து மொத்தம் 10,920 போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த பெறுமதி ரூ. 21,84,000 ஆகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களும் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எப்.முபாரக்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .