2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஆயுர்வேத மருத்துவம்: கிழக்கில் இலவசமாக பெறலாம்

Niroshini   / 2021 செப்டெம்பர் 07 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கதிரவன் எஸ்.எஸ்.குமார், அ . அச்சுதன், பைஷல் இஸ்மாயில்

 

கொரோனா தொற்றாளர்களும் அதிக அறிகுறிகள் இல்லாதவர்களும், தங்களின் தனிமைப்படுத்தும் காலங்களை ஆயுர்வேத வைத்திய சிகிச்சைகளுடன், பாரம்பரிய உணவு முறைகளை பெற்றுக்கொண்டு பூரண சுகத்தை பெற்றுக்கொள்வதற்கான சகல வசதிகளையும் முற்றிலும் இலவசமாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலுள்ள தள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் வழங்கப்பட்டு வருவதாக, கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இதற்கமைய, திருகோணமலை - கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலை, மட்டக்களப்பு தள ஆயுர்வேத வைத்தியசாலை, அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை, கிண்ணியா - நடுத்தீவு மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை போன்ற வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.

அங்கு சீனிப் பரிசோதனை, குருதி அமுக்க பரிசோதனை, சுவாசப் பரிசோதனை உள்ளிட்ட பல வைத்திய பரிசோதனைகளுடன் சிகிச்சைகளும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பாரம்பரிய உணவு வகைகளையும் நாளாந்தம் இலவசமாக வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், திருகோணமலை மாவட்டத்தில் உள்ளவர்கள் தங்களின் தனிமைப்படுத்தும் காலங்களை கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அவர் கூறினார்.

எனவே, திருகோணமலை மாவட்டத்திலுள்ளவர்கள் தங்களினதும், தங்கள் குடும்பத்திலுள்ளவர்களின் உடல் ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்க திருகோணமலை மாவட்டங்களில் உள்ள பிரதேசங்களில் இருக்கின்ற ஆயுர்வேத வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் சமூக நல வைத்தியர்களை தொடர்பு கொண்டு, கொவிட் - 19 தொடர்பான வைத்திய ஆலோசனைகளுடன் அதற்கான சிகிச்சை முறைகளை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும், அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட பிரதேசங்களல் உள்ள வைத்திய பொறுப்பதிகாரிகள் மற்றும் சமூக நல வைத்தியர்களின் அலைபேசி இலக்கங்கள் வருமாறு,

திருகோணமலை பட்டணமும், சூழலும் பிரதேச செயலாளர் பிரிவு Dr.K.Niruba - 0740037294, Dr. N.Subashini - 0779749780, Dr. A.Ilankumaran  -0740037282

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு – Dr. S.R.P.Rajeev - 0740037290, Dr. S.Sathees - 0740037251, Dr. R.Vaikalai - 0774605627

கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவு – Dr. Prasadika Wijeyasekara - 0717787101, Dr.Chamal Wijayasooriya - 0714410301

மோறவேவா பிரதேச செயலாளர் பிரிவு – Dr. Kasundweera - 0713406651

பதவிய ஸ்ரீபுர பிரதேச செயலாளர் பிரிவு – Dr. Jeyamal Indika Kumara -0710373003

கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவு – Dr. Jeyamal Indika Kumara -0710373003

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவு – Dr. H.M.Haris - 0772254232

தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவு – Dr. M.N.P.Mohanachandran - 0752785468, Dr. J.Arunpalan - 0752340800

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவு – Dr. I.S.M.Riswan - 0754381712, Dr.Mrs.M.F.Fahmitha - 0778470575

சேருவில பிரதேச செயலாளர் பிரிவு – Dr. Erandi Jeyasinghe - 0783521989

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு – Dr. Y.M.Rishad - 07197033878


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .