2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்!

R.Tharaniya   / 2025 ஜூலை 17 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி மொரவெவ பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வியாழக்கிழமை(17) அன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை, மொரவெவ பிரதேச செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (17) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற இருந்த நேரத்தில் மாவட்ட செயலகத்தால் நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரதேச செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல வருட காலமாக மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவில் இடமாற்றம் கிடைக்காமல் பலர் இருக்கின்றபோது, சிலர் நகர் பகுதியில் வேலை செய்ய வேண்டும் என்பதற்காக இவ் இடமாற்றத்தினை நிறுத்தியுள்ளதாகவும், முறையான இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக்கோரி “NPP அரசே இடமாற்றத்தில் இடம்பெறும் பாராபட்சங்களை நிறுத்து”, “நியாயமான வருடார்ந்த இடமாற்றத்தை நடைமுறைப்படுத்து” “இடமாற்றத்தில் தொழிற்சங்கத்தின் ஒருதலைபட்ச தலையீட்டை நிறுத்து” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன உட்பட அதிகாரிகளை உள்ளே செல்ல விடாமல் தடுத்து தமக்கு நியாயமான தீர்வினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தை நடாத்துவதற்கு இடமளிக்குமாறும் தங்களுடைய கோரிக்கைக்கு சிறந்த தீர்வினை பெற்றுத் தருவதாகவும், இது தொடர்பாக அரசாங்க அதிபருடன் கலந்துரையாடுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கூறியதை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

அத்துடன் நேற்றைய தினம் (16) கோமரன்டகடவல பிரதேசத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி வாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அபு அலா 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .