Freelancer / 2023 ஜனவரி 26 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி சகாதேவராஜா
இந்தியாவில் கலை பிறந்து இருக்கலாம். ஆனால், இலங்கையில் தான் கலை ஆர்வம் மிகவும் கூடுதலாக இருக்கிறது என அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த நடன கலைஞர் சிதம்பரம் ஆர் சுரேஷ் தெரிவித்தார். அவருடன் மனைவி நடன நர்த்தகி ஷோபனா சுரேஷூம் செவ்வாய்க்கிழமை (24) மாலை காரைதீவுக்கு வருகை தந்திருந்தனர் .
காரைதீவு விபுலானந்தா மணிமண்டபத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமி விபுலானந்தர் பிறந்த இல்லத்தையும் அரும்பொருள் காட்சியகத்தையும் அவர்கள் பார்வையிட்டனர்.
நடன கலைஞர் சிதம்பரம் ஆர் சுரேஷ் அங்கு மேலும் பேசுகையில்கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களை விட இலங்கையில் உள்ள மாணவர்கள் கலையில் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்கு யாழ்ப்பாணம் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களில் நிறைய நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் வெளிநாடுகளில் பல கலைப் பள்ளிகளை நடத்தி வருகின்றார்கள். நான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றவன். சிதம்பரம் நடராஜர் ஆலயம் சிறப்பானது என்றார்.
நடன கலைஞர் சுரேஷ், அவுஸ்ரேலியா நாட்டில் ‘சமர்பணா’ நாட்டிய பள்ளியை நடத்தி வருகிறார். இவரது மனைவி நாட்டிய கலைஞர் திருமதி சோபனா சுரேஸ் சிலம்பு கலையிலும் சிறந்தவர். நடனத்துக்கு முக்கியமானது தாளம் என்பதை விளக்கி ‘108 பரதநாட்டிய ஜதிகள்’ எனும் நூலை தமிழ் , ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago