Janu / 2025 ஒக்டோபர் 12 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 273 MDR இலக்கமுடைய இயந்திரப் படகு சனிக்கிழமை (11) அன்று கடலில் மூழ்கியுள்ளது.
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஏழு நாட்களுக்கு முன்னர் மூன்று மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக இயந்திரப் படகில் ஆழ் கடலுக்குச் சென்றுள்ளனர்.
மூவரும் மீன்களைப் பிடித்து விட்டு வலைகளை படகில் ஏற்றும் போது பாரிய அலையில் சிக்குண்டு படகு கடலில் மூழ்கியுள்ளது.
குறித்த கடற்பரப்பில் மற்றுமொரு படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர்கள் கவிழ்ந்த படகிலிருந்த மூன்று மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த விபத்து வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து சுமார் 103 கிலோ மீட்டர் தொலைவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாழைச்சேனையைச் சேர்ந்த படகு உரிமையாளர் அல்ஹாஜ் எம்.எச்.அலீம் என்பவர் படகு விபத்து சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், துறைமுக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எச்.எம்.எம்.பர்ஸான்
21 minute ago
42 minute ago
48 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
42 minute ago
48 minute ago
53 minute ago