2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘இறக்குமதியை ஏற்றுக்கொள்ள முடியாது‘

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

எமது நாட்டிலே உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்கு  வளங்கள் இருந்தும் தேவையான பயிர்களை உற்பத்தி செய்யாமல் அவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது என்பது ஏற்றுக் கொள்ளக் முடியாது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் மஞ்சள் பயிர்ச்  செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் 50 ஆயிரம் மஞ்சள் கன்றுகள் 5000 குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (18) இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டே அரசாங்கம் சில உணவுப் பொருட்களுக்கு இறக்குமதிக்கான தடையை விதித்திருந்தது.

எமது மாவட்டத்தில் மஞ்சள் இஞ்சி கறுவா உளுந்து பயறு போன்ற பயிர்களை பயிரிடுவதற்கான மண் வளம் செழுமையாகக் காணப்படுகின்றது.

எனினும் எமது உற்பத்திக்குத்  தடையாக இருப்பது ஆரம்ப மூலதனச்  செலவு மற்றும் கருவிகளைப் பெற்றுக்கொள்ளுதல் போன்றனவாகும் .

எனவே இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

தற்போது மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நிலக்கடலை மிளகாய் வாழை போன்ற பயிர்களை உற்பத்தி செய்யக்கூடிய உற்பத்தி கிராமங்களை அடையாளப்படுத்தி வருகின்றோம். நிலக்கடலை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இம்மாவட்டத்தின்  14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பரந்த நிலப்பரப்பில் மஞ்சள் பயிர்ச்செய்கையை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்  எனவும்  அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .