2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 22 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம் மருதமுனை -கல்முனை   இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் திங்கட்கிழமை (22) அன்று உயிரிழந்த நிலையில் ஆமைகள்  கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளனர்.

இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள இரண்டு கடலாமைகளும் சுமார் 3 அடி நீளமும் 25 தொடக்கம் 50 கிலோ கிராம் எடை கொண்டதாகும்  எனவே காலநிலை காரணமாக ஆழ் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடலாமைகள் கரையொதுங்கி வருவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து ஆமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள்   வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.  

மேலும் இம்மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் அண்மையில்   கடலாமைகள் டொல்பின்கள்  உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியிருந்தமை சமூக ஊடகங்களிலும் வெளியாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X