Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
R.Tharaniya / 2025 ஜூன் 30 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு கரடியனாறு கனிஷ்ட பாடசாலையொன்றில் திங்கட்கிழமை (30) அன்று மாணவர்களுக்குவழங்கப்பட்ட சத்துணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி பேதி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதனால் 22 மாணவர்கள் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுஅவர்களில் 14 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்புபோதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக சத்துணவு தயாரித்த ஒருவர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையில் மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தின் கீழ் வழமை போன்று கரடியனாறு இந்து வித்தியாலத்தில் கல்வி பயிலும் 238 மாணவர்களுக்கும் சோற்றுடன் கோழி இறைச்சி மற்றும் கீரை கறிகளை தயாரித்து மாணவர்களுக்கு பகலுணவு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த உணவை உண்ட மாணவர்களில் 22 பேருக்கு வாந்தி பேதி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாடசாலை ஆசிரியர்களின் பாதிப்பு ஏற்பட்ட மாணவர்களை கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.இவர்களில் 14 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்புபோதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொதுச் சுகாதார பரிசோதகர்கள்குறித்த உணவை பரிசோதனை செய்ததுடன் உணவு தயாரித்தவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கு முன்பு கரடியனாறு மகா வித்தியாலயத்தில் சிற்றுண்டியில் வழங்கப்பட்டஉணவு ஒவ்வாமை காரணமாக 30 மேற்பட்ட மாணவர்கள் வாந்தி பேதி மற்றும் மயக்கம் காரணமாக சிகிச்சைக்காககரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குபின் வீடு திரும்பினர். இச்சம்பவத்தில் சிற்றுண்டிச்சாலையில் உணவு வழங்கிய பெண்ணை கைது செய்து செய்யப்பட்டு நீதிமன்றத்தில்தண்டனை விதிக்கப்பட்டதுள்ளது.
பேரின்பராஜா சபேஷ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .