R.Tharaniya / 2025 ஜூன் 12 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஷம்மி குமாரரத்ன, முக்கிய சாட்சிகளை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈச்சிலம்பற்றைச் சேர்ந்த முன்னாள் புலனாய்வு அதிகாரி முன்னாள் பிரிகேடியருக்கு கடத்தல் சம்பவத்துடன் தொடர்பிருந்தது என்று சாட்சியமளித்திருந்தார்.
இந்நிலையில் அவரை பிரிகேடியர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தினார் என்று அச்சுறுத்தப்பட்டவர் திருகோணமலை குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளித்தார்.
இதனை அடுத்து இவ்விடயம் குற்றப்புலனாய்வு தலைமையகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.அதன்படி பத்தரமுல்லையில் வைத்து குறித்த முன்னாள் இராணுவ உயர் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
அவர் புதன்கிழமை (11) அன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை வெள்ளிக்கிழமை(13) அன்று புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
எஸ்.கீதபொன்கலன்
34 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
8 hours ago
9 hours ago