R.Tharaniya / 2025 மே 15 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏணியில் ஏறிய நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் .இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (15)அன்று வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தனது வீட்டின் கூரையை ஏணியில் ஏறி சுத்தம் செய்ய முயற்சித்த 83 வயதுடைய நபர் ஏணியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
தலை, இடுப்புப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இட மாற்றப்பட்டார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார் .
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026