2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஒரு இலக்கத் தகட்டில் இரு கார்கள்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 16 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் கடந்த 13 ஆம் திகதி கடமையில்
ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார், வீதியில் பணித்த கார் ஒன்றைச்
சந்தேகத்தின் பேரில் நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது அக் காரின் எஞ்சின் இலக்கமும் செசி இலக்கமும், வேறு வேறாக உள்ளமை
தெரியவந்துள்ளது. இதனையடுத்து வாடகைக்கு விடப்பட்டுவரும் அக்காரைக்
கைப்பற்றிய பொலிஸார் குறித்த காரின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

விசாரணையின்போது குறித்த காரின் இலக்கத்தில் குருநாகலில் வேறு ஒரு கார்
இருப்பதாகக் கண்டறியப்பட்டதையடுத்து, பொலிஸார் இந்த இரு கார்களின் எந்தக் கார்
குறித்த இலக்கத்துக்கு உரியது எனக் கண்டறிய விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .