Janu / 2025 மே 20 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரஃபின் ஒலுவில் இல்லம், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க அவரது குடும்பத்தினரால் திங்கட்கிழமை (19) உத்தியோகபூர்வமாக பல்கலைக்கழகத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் உட்பட மறைந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரஃபின் புதல்வர் அமான் அஷ்ரப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதற்காக முயற்சித்த அனைவருக்கும் குறிப்பாக தலைவரின் குடும்பத்திற்கும் நன்றியினைத் தெரிவிப்பதோடு மறைந்த தலைவர் அஷ்ரஃப்காகவும் பிரார்த்திப்பதாக இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
பாறுக் ஷிஹான்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .