R.Tharaniya / 2025 ஜூன் 16 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு திங்கட்கிழமை (16) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இவ் அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சபையை கைப்பற்றியுள்ளது.
இதில், ஓட்டமாவடி -2 ஆம் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எச்.எம்.பைறூஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவளித்து தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், பிரதி தவிசாளராக மாஞ்சோலை - பதுரியா நகர் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.எச்.நுபைர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி 8 ஆசனங்கள் ஆதரவுடன் காணப்படுவதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 9 ஆசனங்கள் ஆதரவுடன் பிரதேச சபை ஆட்சியை கைப்பற்றியுள்ளது.


எச்.எம்.எம்.பர்ஸான்
47 minute ago
51 minute ago
1 hours ago
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
51 minute ago
1 hours ago
13 Mar 2026