2025 ஜூலை 16, புதன்கிழமை

ஓட்டோவால் இருவருக்குக் காயம்

Nirosh   / 2021 ஜனவரி 23 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாறுக் ஷிஹான்)

ஓட்டோ சாரதியின் கவனயீனத்தால் ஏற்பட்ட விபத்தில், வீதியில் சென்ற  3 வாகனங்கள் சேதமடைந்ததுடன் இருவர்  காயமடைந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் கட்டையடி பகுதியிலேயே நேற்று (22) இந்த விபத்து பதிவாகியுள்ளது.

விபத்தில் ஓட்டோ சாரதி, மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞனும் காயமடைந்துள்ளனர். மேலும் பிரதான வீதியில் சென்ற மற்றுமொரு ஓட்டோ மற்றும் கார் என்பன பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.

இந்த விபத்துத் தொடர்பில், கல்முனை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X