R.Tharaniya / 2025 மே 20 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கசிப்பு உற்பத்தி பொருட்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினரினால் திங்கட்கிழமை(19) அன்று மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் உள்ள வயல்வெளியில் நீண்ட காலமாக இயங்கி வந்த மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு உற்பத்தி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதே வேளை பொருட்களை மீட்ட பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மீட்கப்பட்ட பொருட்களில் 2 பரள் கோடா பழ வகைகள் கொள்கலன்கள் என்பன உள்ளடங்குவதுடன் பொருட்கள் யாவும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு சட்ட நடவடிக்கைக்காக எடுத்துச் செல்லப்பட்டன.
அத்துடன் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழு குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .