Editorial / 2025 டிசெம்பர் 24 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி
இயற்கை அனர்த்தம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக தடைப்பட்டிருந்த கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்.
மட்டக்களப்பிலிருந்து, திருமலை, கொழும்பு, புகையிரத சேவைகள் புதன்கிழமை(24.12.2025) தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சேதமடைந்த புகையிரத பாதைகள் திருத்தப் பணிகள் யாவும் அரசாங்கத்தின் துரித முயற்சியினால் றீ பில்ட் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு கட்டமாக நிறைவடைந்ததன் பின்பு கடந்த சில நாட்களாக பரீட்சார்த்த சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
அதனையடுத்து புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கான உதயதேவி சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை திருகோணமலையிலிருந்து கொழும்பிற்கான சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பில் இருந்து செல்லும் பயணிகள் கல் ஓயா சந்தியில் இறங்கி திருமலையில் இருந்து வரும் கொழும்புக்கான புகையிரதத்தில் மாற வேண்டும்
இதேவேளை மாகோவில் இருந்து மட்டக்களப்புக்கான சரக்கு மற்றும் எரிபொருள் சேவைகளும் புதன்கிழமை தொடக்கம் மீண்டும் முன்னெடுக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
25 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
49 minute ago
1 hours ago