2025 மே 13, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடி நகர சபை வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்

R.Tharaniya   / 2025 மே 08 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் கட்சி, ஜக்கிய தேசிய கூட்டமைப்பு மற்றும் சுயேற்சை குழுக்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்குமிடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் புதன்கிழமை (07) இடம்பெற்றது.

இதன்போது, காத்தான்குடி நகர சபையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திட்டங்கள் தொடர்பான முக்கிய விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனைத்து வட்டாரங்களையும் வெற்றி கொண்டு பத்து ஆசனங்களையும் இலங்கை தொழிலாளர் கட்சி ஒரு ஆசனத்தை பட்டியல் மூலம் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

எஸ். சினீஸ் கான்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X