Editorial / 2021 ஜனவரி 28 , பி.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
கல்முனை சுகாதார பிராந்தியத்திலுள்ள காரைதீவில் மேலும் ஜந்து மாணவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து அங்குள்ள மூன்று பாடசாலைகள் நாளை (29) வெள்ளிக்கிழமை தொடக்கம் ஒருவாரகாலத்துக்கு மூடப்பட்டுள்ளன.
சுகாதாரத்துறையினரின் பரிந்துரைக்கேற்ப காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரி, சண்முகா மகா வித்தியாலயம் இ.கி.மி.பெண்கள் பாடசாலை ஆகிய 3 பாடசாலைகளே மூடப்பட்டுள்ளன என கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கையாகவே பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன” என்றார்.
கடந்த வெள்ளியன்று இருமாணவர்கள் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து நடாத்திய பி.சி.ஆர் சோதனைகளில் இதுவரை ஏழு மாணவர்கள் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
காரைதீவுப்பிரதேசத்தில் இதுவரை 69பேருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago