Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 04 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, குச்சவெளியிலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டிப்பதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபரிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மீனவத்தொழிலுக்காக கடலுக்குச்சென்ற அப்பாவி சமூகத்தினர் மீது கடற்படை பாதுகாப்புத்தரப்பினர் அத்துமீறி நடப்பதை நாம் வண்மையாகக் கண்டிக்கின்றோம். சந்தேக நபர்களாக சந்தேகிக்கப்பட்டால் உரிய முறைப்படி விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இவ்வாறு தான்தோன்றித்தனமான முறையில் அப்பாவிகள் மீது துப்பாகிச்சூடு மேற்கொள்ளும் இச்செயற்பாட்டை நிறுத்த வேண்டும்.
இவ்வாறான செயற்பாட்டால் நாட்டின் பாதுகாப்புத்துறை மேல் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றமைக்கு பெரும் உதாரணமாகி அமைந்து விடும். மீனவ சமூகத்தை அச்சமூட்டும் இச்செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றார்.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago